Airtel ~ Anime Booth |
இந்தியாவில் Anime-யின் அசுர வளர்ச்சியை கண்டு ஏற்கனவே பல நிறுவனங்கள் Anime ரசிகர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், தங்கள் நிறுவன வளர்ச்சிக்காகவும் இந்தியாவில் தங்களின் தளங்களின் மூலம் Anime-களை கொண்டு வந்தனர்.
Ex. Com : Disney+ Hotstar, Crunchyroll, Netflix, Amaxon Prime Video, Cartoon Network, Sony...
இதனை தொடர்ந்து இந்தியாவின் முன்னணி தகவல் தொடர்பு சேவை வழங்குநரான பாரத் ஏர்டெல் மற்றும் Sony Pictures Network இந்தியாவின் துணை நிறுவனமான Culver Max Entertainment Private Limited (CMEPL) இணைந்து இந்தியாவில் Anime Booth என்ற பெயரில் anime-காக மட்டும் பிரதேயமாக விளம்பரம் மற்றும் இடைவேளை இல்லாமல் 24hrs Anime மட்டும் ஒளிபரப்பப்படும் chennel-யை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது இப்போது முதல் முறை என்பதால் Hindi Dub-களை மட்டும் ஒளிபரப்ப போவதாக Airtel india Youtube பக்கத்தில் promo வெளியிட்டுள்ளனர், அதன் கூடவே தங்கள் தற்போது ஒளிபரப்பபோகும் Anime-களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளனர்.
Announced Anime Names : Naruto, Kochikame, Sergeant Keroro, Naruto Shippuden, Black Clover, and Demon Slayer.
இப்போது hindi மட்டும் அறிவித்திருந்தாலும் பிற்காலத்தில் மற்ற இந்தியா மொழிகளிலும் வர வாய்ப்பிருக்கிறது, முக்கியமாக சென்னை ComicCon 2024 வெற்றியை கண்டு Tamil மற்றும் Telugu Dub-களும் வர வாய்ப்பிருக்கிறது...
குறைகள் :
நீங்கள் ஏர்டெல் DTH வைத்திருந்தல் மட்டுமே இந்த channel-யை பார்க்க முடியும். அதும் இருந்தாலும் இந்த ஒரு channel மட்டுமே Rs.55 என விலையிடப்பட்டுள்ளது, இது அதிகமாக இருந்தாலும் பிற்காலத்தில் பயனாளர்களின் எண்ணிக்கையின் மூலம் குறைக்க வாய்ப்புள்ளது.